தமிழ் சினிமா

தீபாவளி அன்று ஒளிபரப்பாகவுள்ள படத்தை உறுதி செய்த சன் டிவி

செய்திப்பிரிவு

தீபாவளி அன்று ஒளிபரப்பாகவுள்ள படத்தை உறுதி செய்துள்ளது சன் டிவி

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மாயா பஜார் 2016' திரைப்படம் தமிழில் ரீமேக்காகி வருகிறது. சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை பத்ரி இயக்கி வருகிறார். பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகி பாபு, விடிவி கணேஷ், ரித்திகா சென் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படம் திரையரங்க வெளியீடு அல்லாமல், நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் சன் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகவுள்ளது எனத் தகவல் வெளியானது. ஆனால், சன் டிவி தரப்பிலிருந்து எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் இருந்தது.

நாளை (அக்டோபர் 26) விஜயதசமியை முன்னிட்டு 'மாயா பஜார் 2016' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், படக்குழுவினரின் பேட்டி என சன் டிவி ஒளிபரப்பவுள்ளது. இதற்கான வீடியோ விளம்பரத்தை சன் டிவி தங்களுடைய டவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த ட்வீட்டில் "தியேட்டருக்கு வர்றதுக்கு முன்னாடியே உங்க சன் டிவில தீபாவளிக்கு ரிலீஸாக போகிற புத்தம் புதிய திரைப்படமான 'நாங்க ரொம்ப பிஸி' படத்தோட சிறப்பு முன்னோட்டம். காலை 11:30 மணிக்கு" என்று தெரிவித்துள்ளது சன் டிவி.

இந்த ட்வீட்டின் மூலம் 'மாயா பஜார் 2016' தமிழ் ரீமேக் 'நாங்க ரொம்ப பிஸி' என்று தலைப்பிடப்பட்டுள்ளது உறுதியாகிறது. மேலும், தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது தெளிவாகிவிட்டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT