தமிழ் சினிமா

சூரிக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த விஷ்ணு விஷால்

செய்திப்பிரிவு

சூரியின் புகாருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.

'வீரதீர சூரன்' என்ற படத்தில் நடித்தபோது சூரிக்கு சம்பளப் பாக்கி வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். அந்தப் படத்துக்குப் பதிலாக நிலம் வாங்கித் தருவதாகக் கூறி சூரியை மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சூரி அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தைதான் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியின் புகார் திரையுலகில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உடனடியாக விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"கடவுளின் கருணையாலும் ரசிகர்களின் ஆதரவினாலும், திரைப்படங்களிலிருந்து வரும் வருமானத்தில் நன்றாக வாழும் அளவுக்குத் தேவையான வேலையை நான் செய்திருக்கிறேன். ஒருவரை ஏமாற்றி வாழும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போக வேண்டிய அவசியமே இல்லை".

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT