தமிழ் சினிமா

'கபடதாரி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செய்திப்பிரிவு

சிபிராஜ் பிறந்த நாளை முன்னிட்டு 'கபடதாரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'கபடதாரி'. இதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டது. தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்ததைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பைப் படக்குழுவினர் தொடங்கினர். செப்டம்பர் 29-ம் தேதியுடன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு.

இன்று (அக்டோபர் 6) சிபிராஜ் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளத்தில் தமிழ்த் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது 'கபடதாரி' படக்குழுவினர் சிபிராஜுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இதனை சூர்யா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT