தமிழ் சினிமா

28 ஆண்டு கால நட்பு; உங்களை மிஸ் செய்வேன்: பாபு சிவன் மறைவு குறித்து லிங்குசாமி உருக்கம்

செய்திப்பிரிவு

28 ஆண்டு கால நட்பு, உங்களை மிஸ் செய்வேன் பாபு சிவன் என்று இயக்குநர் லிங்குசாமி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியான 'வேட்டைக்காரன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாபு சிவன். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 16-ம் தேதி இரவு காலமானார்.

பாபு சிவனின் மறைக்கு திரையுலக நண்பர்கள், நடிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் கல்விச் செலவை விஜய் ஏற்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

பாபு சிவன் லிங்குசாமியின் நெருங்கிய நண்பர். 'சண்டக்கோழி 2' படத்தில் அசோசியேட் இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், பாபு சிவன் மறைவு குறித்து இயக்குநர் லிங்குசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"1992-ம் ஆண்டு சாரதாம்பாள் தெருவில் என் ரூம்மேட்டாக இருந்தது முதல் 'சண்டக்கோழி 2' வில் என்னுடன் பணியாற்றியது வரை இது 28 ஆண்டு கால நட்பு. உங்களை மிஸ் செய்வேன். அவரது மகளின் அழுகையிலிருந்து என்னால் இன்னும் வெளிவரமுடியவில்லை".

இவ்வாறு லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT