'கமனம்' படத்தில் நித்யா மேனன் லுக்கைப் படக்குழு வெளியிட்டுள்ளது
சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கமனம்'. ஸ்ரேயா சரண் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் பாடகி ‘ஷைலாபுத்ரி தேவி’ என்ற கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். அவருடைய லுக்கை சர்வானந்த் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்துக்கு பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளராக ஞான சேகர் வி.எஸ் பணிபுரிந்துள்ளார். ஒளிப்பதிவாளராக மட்டுமன்றி ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார் ஞான சேகர் வி.எஸ்.
'கமனம்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.