தமிழ் சினிமா

நலன் குமாரசாமி, விஜய் சேதுபதி இணையும் காதலும் கடந்து போகும்

ஸ்கிரீனன்

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்துக்கு 'காதலும் கடந்து போகும்' எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

'சூது கவ்வும்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் விஜய் சேதுபதி. மடோனா நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். சி.வி.குமார் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்க திட்டமிட்டன..

ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் முழுவதுமாக முடிவுற்றது. பெயரிடப்படாத இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் துவங்கப்பட்டன. தற்போது இப்படத்துக்கு 'காதலும் கடந்து போகும்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

SCROLL FOR NEXT