தமிழ் சினிமா

'யாருக்கும் அஞ்சேல்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செய்திப்பிரிவு

பிந்து மாதவி நடிப்பில் உருவாகியுள்ள 'யாருக்கும் அஞ்சேல்' படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தைத் தொடர்ந்து முழுக்க பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் படமொன்றை இயக்கினார் ரஞ்சித் ஜெயக்கொடி. இதன் படப்பிடிப்பை ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பினார்.

பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பானி இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு 'யாருக்கும் அஞ்சேல்' என்று தலைப்பிட்டது படக்குழு. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றது.

தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இதற்கு படக்குழுவினருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளராக கவின் ராஜ், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக தியாகராஜன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். விரைவில் டீஸர் வெளியிட்டுப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT