தமிழ் சினிமா

எந்திரன் 2 அப்டேட்ஸ்: தீபிகாவுடன் ஷங்கர் பேச்சு

ஸ்கிரீனன்

'எந்திரன் 2' படத்தின் நாயகிக்காக தீபிகா படுகோன் உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

ரஞ்சித் இயக்கத்தில் 'கபாலி' படத்தில் நடித்து முடித்தவுடன், ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன் 2' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் ரஜினி. இப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

படத்தின் வில்லனாக விக்ரமை விட இந்தி நாயகர்கள் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், நாயகியாக நடிக்க பல்வேறு முன்னணி நாயகிகளிடம் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு மும்பையில் தீபிகாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

'எந்திரன் 2' படத்துக்காக தான் சந்தித்து பேசியிருப்பதாகவும், அனைத்தும் முடிவான பிறகு நாயகியாக தீபிகா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்கிறது ஷங்கரின் நெருங்கிய வட்டாரங்கள்.

SCROLL FOR NEXT