தமிழ் சினிமா

நடிகர் சங்கத்துக்கு அக். 18-ல் தேர்தல்: முன்னாள் நீதிபதி பத்மநாபன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி சென்னையில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஈ.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

2015 2018 ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை கடந்த ஜூலை மாதம் 15 ம் தேதி நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகள் தொடங்கின. இந்நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஈ.பத்மநாபன் தேர்தலை நடத்துவதற்கான ஆணை யராக அறிவிக்கப்பட்டார். அவரது மேற்பார்வையில் தேர்தல் நடைபெற உள்ள இடம், தேதி உள்ளிட்ட விவரங்களை அறிவிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான 3139 உறுப்பினர்களின் இறுதிப் பட்டியல் கடந்த 2-ம் தேதி வெளி யிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை மயிலாப் பூர் செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஈ.பத்மநாபன் நேற்று அறிவித்தார்.

நடிகர் சங்கத் தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் அன் றைய தினம் மாலையிலேயே வெளி யிடப்பட உள்ளது. இந்தத் தேர்தல் குறித்த அறிவிப்பு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் அறி விப்பு வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் அட்டவணை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகாந்த், ராதாரவி, உள்ளிட்ட நடிகர்களும், நடிகை அஞ்சலி தேவியும் இதற்கு முன் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்களாக பொறுப்பில் இருந் திருக்கிறார்கள். கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக நடிகர் சரத் குமார் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்தமுறை நடைபெறும் தேர்தலில் சரத்குமார் தலைமையி லான அணியும், நாசர் தலைமையி லான அணியும் போட்டியிட உள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரு அணியினரும் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப் படுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT