கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி சின்கா நடித்து வரும் 'லிங்கா' முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.
மே 23ம் தேதி 'கோச்சடையான்' வெளிவர இருக்கும் நிலையில், ரஜினி தனது படத்தின் வேலைகளைத் தொடங்கினார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா நடிப்பில் 'லிங்கா' படத்தின் பணிகள் தொடங்கியது.
இப்படத்தின் பூஜை மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ரஜினி, சோனாக்ஷி சின்கா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடைபெற்ற படப்பிடிப்பு 10 நாட்கள் நடந்தது.
ரஜினியின் நாயகியாக நடித்த சோனாக்ஷி சின்கா, " லிங்கா படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது. படக்குழுவினர் மிக அன்பாக நடந்து கொண்டனர்” என்று தெரிவித்து இருக்கிறார்.
அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே, எப்போது என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.