தமிழ் சினிமா

சபரிமலைக் கோயிலில் பாடகர் எஸ்பிபி குணமடைய சிறப்புப் பிரார்த்தனை

ஏஎன்ஐ

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு எக்மோ கருவியின் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சபரிமலைக் கோயிலில் எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி உஷா பூஜை செய்யப்பட்டு சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் எஸ்பிபி சிகிச்சை பெற்று வருகிறார், அனைவரும் கண்ணீருடன் எஸ்பிபி மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ட்விட்டரில் ரசிகர்கள் எஸ்பிபி விரைவில் குணமடைந்து மீண்டு வர கூட்டுப்பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

“GetWellSoonSPBSir" ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

SCROLL FOR NEXT