கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருக்கும் 'தூங்காவனம்' திரைப்படம் த்ரிஷாவுக்கு 50வது படமாக வெளியாக இருக்கிறது.
'லேசா லேசா' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பிரபல நாயகர்கள் வரிசையில், இன்னும் ரஜினியுடன் மட்டுமே நடித்ததில்லை த்ரிஷா. கமல்ஹாசனுடன் 'மன்மதன் அம்பு' படத்தில் நடித்திருக்கிறார்.
தற்போது மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் 'தூங்காவனம்' படத்தில் நடித்துள்ளார். 49 படத்தில் நடித்து முடித்திருக்கும் த்ரிஷா, தனது 50வது படமாக வெளிவர இருப்பது 'தூங்காவனம்' அல்லது 'அரண்மனை 2' ஆக இருக்கும் என பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
நவம்பர் மாதம் 'தூங்காவனம்' வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. 'அரண்மனை 2' கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தால் தாமதமாகும் எனத் தெரிகிறது. அதுமட்டுமன்றி இன்னும் படப்பிடிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கமல்ஹாசனுடன் நடித்திருக்கும் படம் தனது 50-வது படமாக வெளிவர இருப்பதால் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் த்ரிஷா