தமிழ் சினிமா

திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்தால் பதிப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை: 'ஒன்பது குழு சம்பத்' தயாரிப்பாளர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

'ஒன்பது குழு சம்பத்' படத்தைத் திருட்டுத்தனமாகப் பதிவிறக்கம் செய்தால் பதிப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரகுபதி இயக்கத்தில் பாலாஜி மகாராஜா, நிகிலா விமல், அப்புக் குட்டி, இயக்குநர் இந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஒன்பது குழி சம்பத்'. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ள இந்தப் படம் தற்போது ரீகல் டாக்கீஸ் ஓடிடி தளத்தில் நாளை (ஆகஸ்ட் 15) வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை திருட்டுத் தனமாக பதிவிறக்கம் செய்பவர்கள் மீது பதிப்புரிமை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தயாரிப்பாளர் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இந்தியப் பதிப்புரிமை சட்டம்‌ 1957யின்‌ பிரிவு 17 மற்றும்‌ பர்னே சாசனம்‌ சரத்து 15(2) மற்றும்‌ அனைத்து தேசிய சட்டங்களின்‌ படி இப்படத்தின்‌ உரிமையாளர்‌ 60-20 பிக்சர்ஸ்‌ நிறுவனம்‌. இத்திரைப்படத்தினை இந்தியச் சட்டங்கள்‌ மற்றும்‌ மற்ற நாடுகளின்‌ சட்டங்களின்‌ கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனை சட்டவிரோதமாகத் திரையிடுதல்‌ தண்டனைக்குரிய குற்றமாகும்‌ மற்றும்‌ உரிமையியல்‌ பொறுப்பு மீறிய செயலாகக் கருதப்படும்‌. இப்படத்தில்‌ வரும்‌ கதாபாத்திர‌ பெயர்கள்‌, சம்பவங்கள்‌ அனைத்தும்‌ கற்பனையே.

படத்தயாரிப்பாளர்கள்‌ கணிசமான தொகை மற்றும்‌ நேரத்தினை செலவுசெய்து புதிய படைப்புகளை உங்களுக்கு வழங்குகிறார்கள்‌. இந்த படம்‌ மற்றும்‌ நிகழ்ச்சிகள்‌ அனைத்தும்‌ பொழுதுபோக்கிற்காக மட்டுமே. இப்படமானது உங்களை மகிழ்விப்பதற்காகவே, தயாரிப்பாளர்கள்‌, இயக்குநர்கள்‌, நடிகர்கள்‌, இசையமைப்பாளர்கள்‌ மற்றும்‌ இதர கலைஞர்கள்‌ தங்களின்‌ திறமை முழுவதையும்‌ பயன்படுத்துகிறார்கள்‌. இதுபோன்ற புதுவிதமான முயற்சிகளை ஊக்குவிக்கும்‌ விதமாக இருப்பது உங்களுடைய சந்தா தொகை, நுழைவு சீட்டு மற்றும்‌ இணையதள திரைப்பட வாடகையே ஆகும்‌.

இதுபோன்ற அசாதாரணமான சூழ்‌ நிலையில்‌ நீங்கள்‌ வீட்டிலிருந்தபடியே பாதுகாப்பாகப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை புதிய சேனல்கள்‌ மூலம்‌ கண்டுமகிழ வழங்குகிறோம்‌. இதில்‌ குறிப்பாக டிஜிட்டல்‌ வாயிலாகத் திரைப்படங்கள்‌, குறும்படங்கள்‌ மாற்றும்‌ வெப்சீரிஸ்‌ போன்றவை வழங்குவதில்‌ முன்னணி வகிப்பது Regal Talkies, இந்த Pay View OTT முறையில்‌ குறைந்த செலவில்‌ புதிய நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க வழிலகை செய்கிறது.

வரும்‌ 15 ஆகஸ்டு 2020 அன்று Regal Talkies-ல்‌ 'ஒன்பது குழி சம்பத்'‌ வெளியாக உள்ளது. இப்படத்தினை பெரும்பாலான ஆதரித்தாலும்‌, சிலர்‌ சட்ட விரோத செயல்களில்‌ ஈடுபடுவதால்‌ கடுமையான நடவடிக்கை எடுக்கும்‌ சூழ்நிலை ஏற்படுகிறது.

சட்டவிரோதமான இணையதள வழிதளங்களான Torrent மற்றும் இதர இணையதளங்கள்‌ அல்லது காபிரைட்‌ உரிமையாளரால்‌ அங்கீகரிக்கப்படாத வேறெந்த வலைதளம்‌, செயலிகள்‌ மூலம் இப்படத்தினை பதிவிறக்கம்‌ செய்து பார்ப்பதோ, டெலிகிராம்‌ உள்ளிட்ட வேறு எந்த சமூக வலைதள பக்கங்களில்‌ பதிவது, பகிர்வது, விநியோகிப்பது பதிப்புரிமை சட்டத்தினை மீறிய செயல்‌. இதன்படி பதிப்புரிமை சட்டத்தின்‌ கீழ்‌ உள்ள 63, 63A 65 மற்றும்‌ 65A பிரிவுகளின்படி 3 ஆண்டுகள்‌ சிறைத்தண்டனை மற்றும்‌ 3,00,000 வரை அபராதம்‌ விதிக்கப்படும்‌

இத்திரைப்படத்தின்‌ தயாரிப்பாளர்கள்‌, பதிப்புரிமை உரிமையாளர்கள்‌ சட்டம்‌ மற்றும்‌ தொழில்நுட்ப குழுவினர்‌ உதவியுடன்‌ சட்டவிரோத பதிவிறக்கங்களைக் கண்காணித்து வருகின்றனர்‌. இப்படத்தினை பார்க்கும்‌ நபர்கள்‌ எவரேனும்‌ சட்டவிரோத பதிவிறக்கங்கள்‌ அல்லது டெலிகிராம்‌ உள்ளிட்ட வேறு எந்த சமூக வலைதள பக்கங்களில்‌ பதிவது,பகிர்வது, வினியோகிப்பது போன்ற செயல்களில்‌ ஈடுபட்டால்‌ உங்களின்‌ இணையதள சேவை வழங்கும்‌ நிறுவனத்திடம்‌ இருந்து உங்கள்‌ IP முகவரி பெற்றுத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌.

இதன்படி நாங்கள்‌ தெரிவிப்பது என்னவென்றால்‌ சட்டப்படி முறையான வலைத்தளங்கள்‌ மூலமாக உங்களின்‌ விருப்பமான நிகழ்ச்சிகள்‌ ற்றும்‌ திரைப்படங்களை கண்டூகளியுங்கள்‌. நாங்கள்‌ உங்களின்‌ விருப்பமான நிகழ்ச்சிகளை மலிவு விலையிலேயே தருகிறோம்‌. மலிவு விலை செலுத்துவதைத் தவிர்ப்பதாக நினைத்தால்‌ பெரும்‌ தொகையை அபராதமாகச் செலுத்த நேரிடும்‌"

இவ்வாறு திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT