தமிழ் சினிமா

முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் நடிக்கும் தெலுங்கு வெப்சீரிஸ் 

செய்திப்பிரிவு

கரோனா நெருக்கடி காரணமாக உலக அளவில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் முடங்கியுள்ள வேளையில், தொலைக்காட்சி, கணிப்பொறியைத் தாண்டி ஸ்ட்ரீமிங் தளங்களின் மூலம் புதிய திரைப்படங்கள், தொடர்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2020-ம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை, நெட்ஃபிளிக்ஸில் புதிதாக 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 3 மாதங்களில் 1 கோடி சந்தாதாரர்கள் என்பது வழக்கமாக நெட்ஃப்ளிக்ஸில் இணையும் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

இதனை கருத்தில் கொண்டு பல்வேறு ஓடிடி தளங்களும் புதிய தொடர்கள், திரைப்படங்கள் என்று போட்டி போட்டு வெளியிட்டு வருகின்றன. இது தவிர புதிய ஓடிடி தளங்களும் நாளுக்கு நாள் முளைத்து வருகின்றன.

இந்நிலையில் தெலுங்கு ஓடிடி தளமான ஆஹா தற்போது ஒரு புதிய வெப் சீரிஸை தயாரித்து வருகிறது. அதில் முழுக்க முழுக்க தமிழ் நடிகர்களை நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் படமாக்கப்பட்டுவரும் இந்த தொடரில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், கிஷோர், ரோகிணி, ஜெயப்பிரகாஷ், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இதில் பிரசன்னா நடிக்கும் ஒரு எபிசோடை ‘கே13’ படத்தை இயக்கிய பரத் நீலகண்டன் இயக்கி வருகிறார். இந்த வெப்சீரிஸ் இந்த ஆண்டு இறுதியில் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT