தமிழ் சினிமா

தாரை தப்பட்டை உரிமையை வசப்படுத்தியது லைக்கா

ஸ்கிரீனன்

பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் 'தாரை தப்பட்டை' உரிமையை லைக்கா நிறுவனம் கையகப்படுத்தி இருக்கிறது.

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் உரிமையை கைப்பற்ற பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிட்டு வந்தன. தற்போது இப்படத்தின் உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் ஒருவாரத்துக்கு முன்பு கையொப்பமாகி இருக்கிறது.

விரைவில் 'தாரை தப்பட்டை' படத்தின் இசை வெளியீடு, பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் பட வெளியீடு எப்போது என்பது உள்ளிட்ட தகவல்களை அறிவிக்க இருக்கிறது படக்குழு.

'தாரை தப்பட்டை' மட்டுமன்றி வெற்றிமாறனின் 'விசாரணை' மற்றும் 'நானும் ரவுடிதான்' உள்ளிட்ட படங்களையும் லைக்கா நிறுவனம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT