தமிழ் சினிமா

கொடூர குற்றத்தின் பின்னால் இருப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்: சிவகார்த்திகேயன்

செய்திப்பிரிவு

இந்த கொடூர குற்றத்தின் பின்னால் இருப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மறைவு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

"இந்த கொடூர குற்றத்தின் பின்னால் இருப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அந்த தண்டனைகள் இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இதன் மூலம் நம் அனைவருக்கும் அரசாங்கம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT