தமிழ் சினிமா

தம்பியை நாயகனாக்கும் லாரன்ஸ்!

செய்திப்பிரிவு

தனது தம்பி எல்வினை நாயகனாக அறிமுகம் செய்யவுள்ளார் ராகவா லாரன்ஸ்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளியான 'காஞ்சனா', 'காஞ்சனா 2' உள்ளிட்ட பல படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. தற்போது இந்தியில் அக்‌ஷய் குமார் நடிக்கும் 'லட்சுமி பாம்' படத்தை இயக்கியுள்ளார்.

இதனிடையே, தன் தம்பி எல்வினை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார் லாரன்ஸ்.

இன்று (ஜூன் 21) எல்வின் பிறந்த நாளை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இன்று என் தம்பியின் பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன். அதேபோல் இந்தப் பிறந்த நாளிலும் அவனுக்கான பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது. அவனது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேறப் போகிறது.

ஆம். நாங்கள் பல நாட்கள் காத்திருந்து தற்போதுதான் ஒரு நல்ல திரைக்கதை அமைந்துள்ளது. ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க, ராஜா என்பவர் இயக்க உள்ளார். எல்வின் நாயகனாக நடிக்கிறார். தற்போது நிலவிவரும் கரோனா சூழ்நிலை முடிந்த பின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது".

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT