ஒருவர் உள்நோக்கத்துடன் செய்த விஷயமா கரோனா என்று நடிகை ரைசா வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு ஆகியவை மட்டுமே தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்னும் வெள்ளித்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படாத காரணத்தால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.
தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மட்டும், கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். நீண்ட நாட்களாக எந்தவொரு பணியுமே நடைபெறாத காரணத்தை முன்னிட்டு ரைசா வில்சன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"எனது வேலை தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதே நேரம் அது எல்லோருக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். என்ன இது கரோனா? இது ஒரு காரணத்துக்காக இங்கு வந்திருக்கிறதா?
மற்றவர்களை விட தனக்கு அறிவு அதிகம், நல்ல விஷயத்துக்காக இதைச் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்ட ஒருவர் உள்நோக்கத்துடன் செய்த விஷயமா இது? நாம் கற்றுக்கொண்டு விட்டோமா? இதைத் தாண்டி வர இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது?"
இவ்வாறு ரைசா வில்சன் தெரிவித்துள்ளார்