‘காட்மேன்’ என்ற பெயரில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளங்கோ தயாரிப்பில் இணைய தள தொடர் உருவாக்கப்பட்டது. வரும் 12-ம் தேதி ஆன்லைனில் இதை வெளியிட திட்டமிடப்பட்டது.
இந்த தொடரின் டிரெய்லரில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் காட்சி, வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து இந்த தொடரை தடை செய்ய வேண்டும், தொடரின் இயக்குநர், தயாரிப்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, ‘காட் மேன்’ தொடரின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 3-ம் தேதி இருவரும் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால், இருவரும் ஆஜராக வில்லை. இதையடுத்து நாளை (6-ம் தேதி) காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண் டும் என மத்திய குற்றப்பிரிவு போலீ ஸார் 2-வது முறையாக இருவ ருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.