தமிழ் சினிமா

60 நடிகர், நடிகை, தொழில் நுட்பப் பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம்: தமிழக அரசு அனுமதி

செய்திப்பிரிவு

சின்னத்திரைப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் சின்னத்திரைப் படப்பிடிப்பு தொடங்கிக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதில் அதிகப்ட்சமாக 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் இது போதாது எண்ணிக்கையை உயர்த்தி அனுமதி அளிக்க வேண்டும் என்று மீண்டும் சங்கங்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் 20 என்பதை 60 ஆக அதிகரித்து தமிழக அரசு அனுமதியளித்துள்ளது,

இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனம்‌ (FEFSI) மற்றும்‌ தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ (STEPS) கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளுடன்‌ சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு 21.5.2020 அன்று நான்‌ அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தேன்‌.

அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர்‌, நடிகை மற்றும்‌ தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும்‌, இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும்‌ என்ற கோரிக்கையை தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனம்‌ மற்றும்‌ தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தினர்‌, செய்தித்‌ துறை அமைச்சரை நேரில்‌ சந்தித்து கோரிக்கை வைத்தனர்‌.

அவர்களது கோரிக்கை குறித்து செய்தித்துறை அமைச்சர்‌ என்னுடன்‌ சுலந்தாலோசித்தார்கள்‌. மேற்படி
சங்கத்தினரின்‌ கோரிக்கையை எற்று அதிகபட்சமாக 60 நடிகர்‌, நகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31.5.2020 முதல் நடத்த அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.

சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுப்படப்பிடிப்பிற்கும் (Serial) ஒரு முறை மட்டும் முன் அனுமதி பெறுதல் வேண்டும்.

சின்னத்திரை படப்பிடிப்பில்‌ சுலந்து கொள்ளும்‌ அனைவரும்‌ மத்திய, மாநில அரசுகள்‌ அவ்வப்போது விதிக்கும்‌ அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல்‌ பின்பற்ற வேண்டும்‌. சின்னத்திரை தயாரிப்பாளர்கள்‌ அதனை உறுதி செய்து கொண்டு, படப்பிடிப்புகள்‌ நடத்திட வேண்டும்‌ என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT