தமிழ் சினிமா

வடிவேலுவுக்கு புகழாரம் சூட்டியுள்ள விவேக்

செய்திப்பிரிவு

மீம்ஸ் கிரியேட்டர்கள் தொடர்பாக வடிவேலுவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் விவேக்

சமூக வலைதளத்தில் ஒரு விஷயம் வைரலாக பரவுகிறது என்றால், அதற்கு மீம்ஸ்கள் ரொம்பவே துணையாக இருக்கும். ஒரு பெரிய உரை மக்களுக்கு உணர்த்துவதை, ஒரு மீம் சட்டென்று உணர்த்திவிடும். அந்த வகையில் சமூக வலைதளத்தில் மீம்ஸ் உருவாக்குபவர்களுக்கு ஒரு தனி மரியாதையே உண்டு.

தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அச்சுறுத்தி வருகிறது. இது தொடர்பாக தனது காமெடியை முன்வைத்து உருவான மீம்மை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டினார் விவேக்.

அதற்கு "மீம் கிரியேட்டர்களின் தலைவர் வடிவேலு" என்று நக்கலாக கூறினார். உடனே அதற்கு பதிலளிக்கும் விதமாக விவேக் கூறியிருப்பதாவது:

"உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி"

இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT