தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்கிறார் ரம்யா.
விஜய் தொலைக்காட்சியில் பல முன்னணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் ரம்யா. மேலும், பல்வேறு முன்னணி படங்களின் இசை நிகழ்ச்சிகளையும் தொகுதி வழங்கியுள்ளார். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளத்திலும் இவர் பிரபலம்.
சில மாதங்களாகவே உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்கள் நிறைய வெளியிட்டு வந்தார். சமீபமாக டிக் டாக் வீடியோக்கள் மூலமாகவும் பிரபலமாகி வந்தார். 'மாஸ்டர்', சங்கத்தலைவன்' உள்ளிட்ட சில படங்களிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே அனைத்து சமூக வலைதளத்திலும் பிரபலமாகி வந்தவர் இப்போது விலகியிருக்கிறார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா கூறியிருப்பதாவது:
"இந்த ஊரடங்கின் கடைசி வாரத்தை மெதுவாக எடுத்துக்கொள்ளப் போகிறேன். உயிரோடு இருப்பதற்காக என் இதயமும் மனமும் பாராட்டை விரும்புகின்றன. இருக்கும் அனைத்துக்காகவும் நன்றி செலுத்தி ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாக வாழுங்கள். கவலை வேண்டாம். நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன். ஒரு குட்டி இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன் என் அன்பு மக்களே. அதுவரை உங்கள் உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்"
இவ்வாறு ரம்யா தெரிவித்துள்ளார்.