தமிழ் சினிமா

மிஷ்கின் இயக்கத்தில் அருண் விஜய்

செய்திப்பிரிவு

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

'அக்னிச் சிறகுகள்', 'சினம்' மற்றும் அறிவழகன் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய். இவற்றைத் தொடர்ந்து 'பாக்ஸர்' படத்தின் படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தவுள்ளார். இந்தப் படம் எப்போதும் தொடங்கும் என்பது தெரியாமல் உள்ளது.

இதனிடையே, அடுத்ததாக நடிக்கவுள்ள படங்களுக்குக் கதைகள் கேட்டு வந்தார் அருண் விஜய். அதில் இயக்குநர் மிஷ்கின் சொன்ன கதை மிகவும் பிடித்துவிடவே, உடனே ஒப்புக் கொண்டுள்ளார்.

அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி படத்தைத் தயாரித்து வரும் ஆன் இன் பிக்சர்ஸ் நிறுவனமே மிஷ்கின் - அருண் விஜய் கூட்டணி படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளது.

தற்போது பேச்சுவார்த்தையில் மட்டுமே முடிவாகியுள்ள இந்தக் கூட்டணி, கரோனா ஊரடங்கு முடிந்து ஒப்பந்த ரீதியாக முடிவாகி பின்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. 'துப்பறிவாளன் 2' இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு மிஷ்கின் தனது அடுத்த படம் குறித்து அறிவிக்காமலேயே இருந்தார். தற்போது அருண் விஜய்யை இயக்க மிஷ்கின் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT