தமிழ் சினிமா

''ட்விட்டரா... அப்படின்னா என்ன தம்பி?'' - செந்தில்

செய்திப்பிரிவு

''ட்விட்டரா... அப்படின்னா என்ன தம்பி?'' என்று தனது ட்விட்டர் கணக்கு குறித்துக் கேட்டதற்கு செந்தில் பதில் அளித்தார்.

கரோனா அச்சுறுத்தலால் மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. இதனால் எந்தவொரு படப்பிடிப்புமே இல்லாமல் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

இந்தச் சமயத்தில்தான் பலரும் சமூக வலைதளத்தின் தாக்கத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். பல்வேறு பிரபலங்கள் ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடல், இன்னொரு பிரபலத்துடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் கலந்துரையாடல் என தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகமாகியுள்ளது.

இதனிடையே இன்று (மே 5) மாலை நடிகர் செந்தில் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது. அதில் அவருடைய பெயரில் ஒரு அறிக்கையும் வெளியிட்டார்கள். @senthiloffl என்ற பெயரில் அந்த ட்விட்டர் கணக்கு இருந்தது.

இது தொடர்பாக நடிகர் செந்திலிடம் பேசியபோது, அனைத்தையும் கேட்டுக்கொண்டார். பின்பு, "தம்பி.. எனக்கு போன் வந்தால் எடுத்துப் பேசத் தெரியும். இந்த ட்விட்டர் கிட்டர் எல்லாம் தெரியாது. அதெல்லாம் யாரோ ஆரம்பிச்சது. நமக்கு அதில் எல்லாம் கணக்கு இல்லை" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT