தமிழ் சினிமா

இதற்கு முன்பு உங்களை இப்படி மிஸ் செய்ததில்லை: தனுஷ் சகோதரி ஏக்கம்

செய்திப்பிரிவு

இதற்கு முன்பு உங்களை இப்படி மிஸ் செய்ததில்லை என்று தனுஷின் சகோதரி கார்த்திகா ஏக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் அச்சத்தால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் மட்டும் வெளியிட்டு வருகிறார்கள்.

கரோனா விழிப்புணர்வு தொடர்பாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும், தனுஷுக்கு அண்ணன் செல்வராகவன் மற்றும் சகோதரிகள் விமலகீதா, கார்த்திகா ஆகியோர் இருக்கிறார்கள். இதில் சகோதரி கார்த்திகா ஒரே ஊரில் இருந்தாலும் தன்னால் தனது குடும்பத்தினரைப் பார்க்க முடியவில்லை என்பதைச் சோகமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனுஷின் சகோதரி கார்த்திகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:

"என் வாழ்வில் குறைந்தது 2 மாதங்களுக்கு ஒரு முறையாவது நாங்கள் ஒருவரையொருவர் பார்க்காமல் இருந்ததில்லை. எங்கள் வாழ்வில் முதன்முறையாக ஒரே நகரத்திலிருந்தும் பிரிந்திருக்கிறோம். இதற்கு முன்பு உங்களை இப்படி மிஸ் செய்ததில்லை கய்ஸ். தூய அன்பு மற்றும் குடும்பத்தோடு செலவிடும் நேரம் ஆகியவற்றுக்கு இணையாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. உங்களை மிகவும் நேசிக்கிறேன். மிக மிக அதிகமாக மிஸ் செய்கிறேன்"

இவ்வாறு கார்த்திகா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT