படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால், தினசரி நடிகர்களுக்கு உதவ நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலை நடிகர் சங்கத்தின் தனி அலுவலர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நடிகர்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள்.
மேலும், படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் தினசரி தொழிலாளர்கள் அனைவருமே கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதியுதவி மற்றும் பொருளுதவி வசூல் செய்து வருகிறது.
பெப்சி அமைப்பைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தில் உள்ள தினசரி நடிகர்களுக்கும் உதவலாம் என்று வங்கிக் கணக்கு ஒன்றை வெளியிட்டு நடிகர் சங்கத்தின் சிறப்பு அலுவலர் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு யார் எவ்வளவு நிதியுதவி வழங்கினார்கள் என்ற விவரம் வெளியாகாமலேயே இருந்தது.
தற்போது அதன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி:
பூச்சி முருகன் - 10 ஆயிரம் ரூபாய்
ஐசரி கணேஷ் - 10 லட்ச ரூபாய்
சத்யப்ரியா - 10 ஆயிரம் ரூபாய்
ப்ளாக் பாண்டி (எ) லிங்கேஸ்வரன் - 100 ரூபாய்
பொன்வண்ணன் - 25 ஆயிரம் ரூபாய்
சேலம், பார்த்திபன் - 10 ஆயிரம் ரூபாய்
மாலதி (எ) ரித்விகா - 5 ஆயிரம் ரூபாய்
எஸ்.ஜே.சூர்யா - 50 ஆயிரம் ரூபாய்
கோவை சரளா - 10 ஆயிரம் ரூபாய்
ரோகிணி - 10 ஆயிரம் ரூபாய்
சந்தான பாரதி - 5 ஆயிரம் ரூபாய்
லதா சேதுபதி - 10 ஆயிரம் ரூபாய்
நாகிநீடு - 10 ஆயிரம் ரூபாய்
சச்சு (எ) சரஸ்வதி - 10 ஆயிரம் ரூபாய்
பிரபா ரமேஷ் - 10 ஆயிரம் ரூபாய்
சாய் ப்ரதீப் ( எ) ஆதி - 25 ஆயிரம் ரூபாய்
சூரி - 1 லட்ச ரூபாய்
நாசர் - 50 ஆயிரம் ரூபாய்
சங்கீதா - 15 ஆயிரம் ரூபாய்
கார்த்தி - 2 லட்ச ரூபாய்
இதுவரை மொத்தமாக 15, 65,100 ரூபாய் வசூலாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது,