நடிகர் அஜித்குமார் தன்னுடை 43வது பிறந்தநாளான மே 1-ம் தேதி புனேயில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அஜித்குமார் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளை மிகவும் எளிமையாக கொண்டாடுவது வழக்கம். கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கியது. தற்போது பாடல் கம்போஸிங் வேலைகள் நடந்து வருவதால் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகளை அடுத்த சில வாரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தனது நண்பரை சந்திக்க சென்றவர் தன்னுடைய 43வது பிறந்த நாளான வியாழக்கிழமை (மே 1) சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவர் அடுத்த சில நாட்களில் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அஜீத்துக்கு வாழ்த்து சொல்ல அவரது திருவான்மியூர் வீட்டின் முன் வியாழக்கிழமை கூடினர்.