தமிழ் சினிமா

இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டான  #Ghilli

செய்திப்பிரிவு

சன் தொலைக்காட்சியில் 'கில்லி' திரையிடப்பட்டதால், விஜய் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கில்லி'. 2004-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விஜய்யை கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது. அவருடைய திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்று சொல்லலாம்.

பாடல்கள், சண்டைக் காட்சிகள், வசனங்கள், பிரகாஷ்ராஜின் நடிப்பு என அனைத்து வகையிலும் இந்தப் படத்துக்குப் பாராட்டு கிடைத்தது. மேலும், இப்போதும் இந்தப் படம் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டால் பலரும் கொண்டாடி மகிழ்வார்கள். அப்படித்தான் நேற்று (மார்ச் 29) நடந்தது.

ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் நேற்று (மார்ச் 29) மாலை 'கில்லி' திரையிடப்பட்டது. இதனை விஜய் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இதனால் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #Ghilli என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் ட்ரெண்டானது.

இதில் 'கில்லி' படம் குறித்த தங்களுடைய பார்வை, விமர்சனங்கள், பிடித்த காட்சிகள் எனப் பலரும் கருத்துகள் பகிர்ந்து வந்தார்கள். இதனால்தான் இந்திய அளவில் முதலிடத்தில் #Ghilli என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இந்தப் படம் தொடர்பாக சிலர் பகிர்ந்த கருத்துகள் உங்கள் பார்வைக்கு:

SCROLL FOR NEXT