தமிழ் சினிமா

கரோனா முன்னெச்சரிக்கை: பெப்சி தொழிலாளர்களுக்கு உதவியவர்களின் முழுமையான பட்டியல்

செய்திப்பிரிவு

கரோனா அச்சம் தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பெப்சி தொழிலாளர்களுக்குப் பலரும் உதவி செய்து வருகிறார்கள். இது தொடர்பான முழுமையான பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நிதியுதவியாகவும், அரிசி மூட்டைகளையும் தந்து உதவியுள்ளனர். யாரெல்லாம் எவ்வளவு உதவி செய்தார்கள் என்பதை பெப்சி அமைப்பு அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அதன் விவரம்:

பண உதவியாக வழங்கியவர்கள்:

ரஜினிகாந்த் - 50 லட்ச ரூபாய்

சிவகுமார், சூர்யா, கார்த்தி - 10 லட்ச ரூபாய்

சிவகார்த்திகேயன் - 10 லட்ச ரூபாய்

விஜய் சேதுபதி - 10 லட்ச ரூபாய்

இயக்குநர் பி.வாசு - 1 லட்ச ரூபாய்

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் - 1 லட்ச ரூபாய்

ஹரிஷ் கல்யாண் - 1 லட்ச ரூபாய்

சுப்ரீம் சுந்தர் - 1 லட்ச ரூபாய்

ப்ரைம் பிக்சர்ஸ் லட்சுமணன் குமார் - 1 லட்ச ரூபாய்

லோகேஷ் கனகராஜ் - 50 ஆயிரம் ரூபாய்

'ஆடுகளம்' நரேன் - 25 ஆயிரம் ரூபாய்

'ஜீனியஸ்' படத்தின் தயாரிப்பாளர் ரோஜன் - 17 ஆயிரம் ரூபாய்

நடிகை சச்சு - 10 ஆயிரம் ரூபாய்

ஸ்டில்ஸ் சிற்றரசு - 5 ஆயிரம் ரூபாய்

ஸ்டில்ஸ் ஞானம் - 5 ஆயிரம் ரூபாய்

ஜெகன் - 5 ஆயிரம் ரூபாய்

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் செளந்தர் - 1000 ரூபாய்

நன்மதி ஜெகன் - 1000 ரூபாய்

பொருளாக வழங்கியவர்கள் பட்டியல்:

தாணு - 250 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்)

இயக்குநர் ஹரி - 100 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்)

ராமலிங்கம் மேஸ்திரி - 100 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்)

தயாரிப்பளர் தில்லி பாபு - 20 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்)

ராதாரவி - 12 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்)

மனோபாலா - 10 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்)

சேலம் மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் பார்த்திபன் - 10 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்)

ஜெய்வாந்த் - 10 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்)

நடிகர் சூரி - 8 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்)

சஞ்சய் பாரதி - 4 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்)

நிகில் - 4 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்)

சக்திவேல் பெருமாள் சாமி - 2 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்)

சந்தான பாரதி - 2 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்)

நடிகர் முனிஷ் - 40 கிலோ துவரம் பருப்பு

SCROLL FOR NEXT