தமிழ் சினிமா

கரோனா வைரஸை அழிக்கச் சிறந்த வழிகளைக் கையாளவேண்டும்: விஷால்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸை அழிக்கச் சிறந்த வழிகளைக் கையாளவேண்டும் என்று விஷால் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் திரையரங்குகள், கல்விக்கூடங்கள், டாஸ்மாக் பார்கள் ஆகியவரை மூடப்பட்டுள்ளன. மேலும், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது கரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

”கரோனாவுக்கு எதிரான இந்த போரில் நண்பர்கள் அனைவரும் உறுதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொறுப்புள்ள குடிமகன்களாக அனைவரையும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு தெரிவித்து, இந்த வைரஸை அழிக்கச் சிறந்த வழிகளைக் கையாளவேண்டும்”

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT