தமிழ் சினிமா

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: அரசுக்கு கமல் நன்றி

செய்திப்பிரிவு

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்காக தமிழக அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவுகூரியதில் அரசு, நடிகர் இனத்திற்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி.

அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் நானும் ஒருவன்'' என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT