தமிழ் சினிமா

40க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் சசிகுமார்

செய்திப்பிரிவு

சசிகுமார் நடிக்கும் 'ராஜவம்சம்' படத்தில் அவருடன் 40க்கும் மேற்பட்ட முக்கியக் கலைஞர்கள் நடித்துள்ளனர்.

கூட்டுக்குடும்பம், நட்பு, காதல் ஆகிய கதைக்களங்களே தனக்குச் சரியாக இருக்கும் என்று கருதும் நடிகர் சசிகுமார், தொடர்ந்து அதுபோன்ற கதைகளிலேயே நடித்து வருகிறார். தற்போது சசிகுமார்- நிக்கி கல்ராணி நடிக்கும் படம் 'ராஜவம்சம்'. இது சசிகுமாரின் 19-வது படம்.

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரிக்கும் இப்படத்தை கதிர்வேலு இயக்குகிறார். நட்சத்திப் பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குநர் சுந்தர்.சி. அவரிடம் உதவி இயக்குநராகப் பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு .

'ராஜவம்சம்' படத்தில் ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ் , மனோபாலா, சிங்கம் புலி, யோகி பாபு, 'கும்கி' அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி மணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணிமேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர் .

சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இப்படத்துக்கு இசை அமைக்கிறார். சசிகுமார் நடிப்பில் ‘ராஜவம்சம்’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ ஆகிய 2 படங்களும் அடுத்தடுத்து வெளிவரத் தயாராகி வருகின்றன.

SCROLL FOR NEXT