தமிழ் சினிமா

பசங்க-2 எனப் பெயர் மாறியது ஹைக்கூ

ஸ்கிரீனன்

பாண்டிராஜ் இயக்கியிருக்கும் 'ஹைக்கூ' திரைப்படத்தின் தலைப்பு வரிச்சலுகைக்காக 'பசங்க 2' என்று தலைப்பு மாற்றியிருக்கிறார்கள்.

'இது நம்ம ஆளு' படம் தாமதம் ஆனதால், சூர்யா தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் பாண்டிராஜ் தயாரித்து இயக்கிய படம் 'ஹைக்கூ'. சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் பல்வேறு சிறு குழந்தைகள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஆரோல் கொரெலி இசையமைத்து வரும் இப்படத்துக்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் துவங்கி நடைபெற்று வந்தது. 'ஹைக்கூ' படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் படத்தின் வரிச்சலுகை காரணங்களுக்காக 'ஹைக்கூ' என்ற தலைப்பை மாற்ற இருப்பதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளை பரிசீலித்து வந்தது படக்குழு.

தற்போது சூர்யா மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் என அனைவருமே 'பசங்க 2' என்ற தலைப்பு சரியாக இருக்கும் என முடிவெடுத்து இருக்கிறார்கள். 'பசங்க 2' படத்துக்காக அதிகாரப்பூர்வ போஸ்டர்களும் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

SCROLL FOR NEXT