தமிழ் சினிமா

மீண்டும் தொலைக்காட்சியில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

செய்திப்பிரிவு

நடிகை லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் மீண்டும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார்.

நடிகையாகவும், இயக்குநராகவும் பிரபலமானவர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் ஹவுஸ் ஓனர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை வழங்கவுள்ளார்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்குப் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இடைவெளி கொடுத்திருந்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற நிகழ்ச்சியை இணையத்துக்காக வழங்கி வருகிறார். தற்போது கலைஞர் டிவியில் நேர்கொண்ட பார்வை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

வரும் பிப்ரவரி 17 முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியைப் பற்றி விசாரிக்கையில், சமூகத்தின் சீரழிவுக்குக் காரணமான விஷயங்கள் பற்றி இந்த நிகழ்ச்சியில் விமர்சிக்கப்பட்டு, சாடப்படும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT