'ராஜவம்சம்' படத்தின் மூலம் பாடகராகவும் அறிமுகமாகவுள்ளார் நடிகர் சதீஷ்
கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, ராதாரவி, யோகி பாபு, சதீஷ், விஜயகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராஜவம்சம்'. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பிப்ரவரியில் படத்தை வெளியிட முடிவு செய்து பணிபுரிந்து வருகிறது படக்குழு. இதனிடையே இந்தப் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகிறார் சதீஷ். இந்தப் படத்தில் சசிகுமார், சதீஷ் உள்ளிட்டோர் நடனமாடும் பாடல் ஒன்று உள்ளது.
இதில் சதீஷ் பாடும் வரிகளை, அவரை வைத்தே பாட வைத்துள்ளார் சாம் சி.எஸ். இதுதான் சதீஷ் பாடியுள்ள முதல் பாடலாகும். மேலும், இந்தத் தகவலைத் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்த சதீஷ், சாம் சி.எஸ்.ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், உங்களுடைய கவனத்துக்கு என்று ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி அனைத்து இசையமைப்பாளர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.