தமிழ் சினிமா

'மாநாடு' அப்டேட்: அடுத்ததாக 4 முக்கிய நடிகர்கள் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

'மாநாடு' படத்தில் சிம்புவுடன் நடிக்க 4 முன்னணி நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் 'மாநாடு'. சிம்பு பிறந்த நாள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே படத்தில் நடிக்கவுள்ளவர்களிடம் தேதிகள் வாங்கப்பட்டு வருகிறது. இந்தத் தேதிகளை முன்வைத்துப் படப்பிடிப்பு எப்போது தொடங்கலாம் என்பதை விரைவில் முடிவு செய்யவுள்ளது படக்குழு.

இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் சிம்புவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து சிம்புவுடன் நடிக்கவுள்ள நடிகர்களின் அடுத்தகட்டப் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் போப் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் வரிசையில் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன், கலை இயக்குநராக சேகர், எடிட்டராக ப்ரவீன் கே.எல், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி, ஒரே கட்டமாக முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாளன்று, திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் படப்பூஜையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

SCROLL FOR NEXT