ஜீ சினி விருது விழாவில் ‘ஜீ திரை’ சேனல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கமல். 
தமிழ் சினிமா

புது படங்களின் அணிவகுப்பு

செய்திப்பிரிவு

ஜீ சினி விருது விழாவில் ‘ஜீ திரை’ சேனல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கமல்.ஜீ தமிழ் சேனலின் புதிய வரவாக, ‘ஜீ திரை’ சினிமா சேனல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இதன் முன்னோட்ட ஒளிபரப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கியது. தமிழ் ரசிகர்களின் கலாச்சாரம் மற்றும் ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள ‘ஜீ திரை’, சினிமா சேனல், நிச்சயம் ரசிகர்களின் மனத்தை அள்ளும் என்கிற உறுதிமொழியோடு இந்த புதிய ஒளிபரப்பை தொடங்கியுள்ளது சேனல் தரப்பு. அதற்கு ஏற்றாற்போல, ‘ரத்தத்தில் கலந்தது சினிமா’ என்ற பிராண்ட் வாக்கியத்தையும் இணைத்துள்ளனர்.

சேனலின் புதிய அம்சமாக, ஜனவரி 31-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதுவரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாத புதிய படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. வாரம் ஒரு புதிய திரைப்படம் என ஆண்டு முழுவதும் தொடர்ந்து 52 வாரங்களுக்கு புத்தம் புதிய திரைப்படங்கள் ‘தெறி ஃபிரைடேஸ்’ என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளன. அதேபோல, சிறந்த பழைய படங்களை வழங்கும் ‘ஃபில்ட்டர் காவியம்’, ஒவ்வொரு வெள்ளியும் விளம்பரம் இல்லாத ‘நடுவுல கொஞ்சம் பிரேக்க காணும்’ என்ற வரிசையிலான படங்கள் என தனித்துவமான அம்சங்கள் இடம்பெறும். ‘8 தோட்டாக்கள்’, ‘சவரக்கத்தி’, ‘ராஜா ரங்குஸ்கி’ ஆகிய படங்கள் இந்த வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ளன என்கிறது சேனல் தரப்பு.

SCROLL FOR NEXT