தமிழ் சினிமா

இயக்குநராகும் நடன இயக்குநர் பிருந்தா

செய்திப்பிரிவு

இந்தியத் திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா, துல்கர் சல்மான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

இந்தியத் திரையுலகில் அனைத்து முக்கியமான படங்களிலும் ஏதாவது ஒரு பாடலுக்கு பிருந்தா நடனம் அமைத்திருப்பார். அந்த அளவுக்கு பிருந்தா மிகவும் பிஸி. அதிலும், மணிரத்னம் படங்கள் என்றாலே நடன இயக்குநர் பிருந்தாவாகத்தான் இருக்கும். இப்போது அவரும் இயக்குநர் ஆகிவிட்டார்.

தான் நடனம் அமைப்பதாக ஒப்புக்கொண்ட படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு, தமிழில் படம் இயக்கவுள்ளார் பிருந்தா. இதில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கவுள்ளார். காதல் கலந்த காமெடிப் படமாக உருவாகும் இதில் அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் என இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது.

நடன இயக்குநர்களாகத் திரையுலகில் நுழைந்து இயக்குநரான ராஜு சுந்தரம், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் வரிசையில் இப்போது பிருந்தாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT