தமிழ் சினிமா

மீண்டும் இணைந்த ’ஏ1’ கூட்டணி

செய்திப்பிரிவு

'ஏ1' படத்தில் பணிபுரிந்த இயக்குநர் ஜான்சன் - சந்தானம் கூட்டணி, மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது.

2019-ம் ஆண்டு ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்து வெளியான படம் 'ஏ1'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, சந்தானம் - ஜான்சன்.கே இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணத் திட்டமிட்டார்கள்.

இது தொடர்பான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாகவே நடந்து கொண்டிருந்தது. தற்போது இந்தக் கூட்டணி படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். தற்போது இந்தக் கூட்டணியில் ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தின் பூஜை நேற்று (ஜனவரி 20) சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பூஜையில் சந்தானம், இயக்குநர் ஜான்சன்.கே, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் மதன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார்.

SCROLL FOR NEXT