வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள 'மாநாடு' படத்தின் படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் 'மாநாடு'. இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தையில் இருந்த இந்தப் படம் இப்போது தான் படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை சிம்புவுடன் நடிக்கவுள்ளவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வந்தாலும், தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மாலை 6 மணி முதல் 5 நிமிடத்துக்கு ஒரு அப்டேட் என்ற முறையில் அறிவித்து வருகிறார்.
அதன்படி கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் சிம்புவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் வரிசையில் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன், கலை இயக்குநராக சேகர், எடிட்டராக ப்ரவீன் கே.எல், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இந்த அதிகாரபூர்வ அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ’மாநாடு’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது.