தமிழ் சினிமா

'குருதி ஆட்டம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செய்திப்பிரிவு

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ’குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

புதுமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான படம் ‘8 தோட்டாக்கள்’. இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீகணேஷ், அதர்வா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கத் தொடங்கினார்.

'குருதி ஆட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டாலும், பல்வேறு சிக்கலால் படத்தின் பணிகள் தடைப்பட்டுக் கொண்டே இருந்தன.

தற்போது அனைத்தும் பேசி முடிக்கப்பட்டு, படத்தின் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT