தமிழ் சினிமா

நடிகர் வினு சக்ரவர்த்தி கவலைக்கிடம்

செய்திப்பிரிவு

‘குரு சிஷ்யன்’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி (70). உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இவர் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நினைவிழந்த நிலையில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT