தமிழ் சினிமா

தணிக்கை அதிகாரிகளிடம் போராடிய 'மாரிஜுவானா' படக்குழு

செய்திப்பிரிவு

தணிக்கை அதிகாரிகளிடம் போராடி, தங்களுடைய படத்தைத் தணிக்கை செய்துள்ளது 'மரிஜுவானா' படக்குழு.

எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக், ஆஷா, பவர் ஸ்டார், ஜனனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ’மரிஜுவானா’. தேர்ட் ஐ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு.

இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 51 காட்சிகளை நீக்கினால் மட்டுமே 'ஏ' சான்றிதழ் கொடுக்க முடியும் எனக் கூறியுள்ளனர். ஆனால், படக்குழுவினரோ அவ்வளவு காட்சிகளை நீக்கினால் கதைக்களமே போய்விடும். நீங்கள் 'ஏ' சான்றிதழே கொடுங்கள் என்று கூறியது.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஆனந்த் கூறுகையில், "இளம் சமூகத்தில் போதைக்கு அடிமையாகி தீய வழிகளுக்குச் செல்கிறார்கள். இதற்குக் காரணம்என்ன என்பதைச் சொல்லும் படம் ’மரிஜுவானா’. உண்மையை அப்படியே சொல்லியிருக்கிறோம். ஆகையால் தணிக்கை அதிகாரிகள் படத்தின் கருத்து நன்றாக இருக்கிறது. ஆனால், 51 கட் கொடுக்க வேண்டியுள்ளதே என்றார்கள்.

எவ்வளவோ எடுத்துரைத்தும் கேட்கவில்லை. படத்தின் காட்சிகளைத் தூக்கினால், கதைக்களமே போய்விடும் என்பதால் ஏ சான்றிதழ் வாங்கிவிட்டோம். இளைஞர்களுக்கான படம் என்பதால் அவர்கள் பார்த்தாலே போதுமானது" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT