தமிழ் சினிமா

சத்தமின்றி தொடங்கப்பட்ட 'துக்ளக் தர்பார்' படப்பிடிப்பு

செய்திப்பிரிவு

விஜய் சேதுபதி நடிக்கும் 'துக்ளக் தர்பார்' படப்பிடிப்பு சத்தமின்றி சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தில்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க, பூஜை போடப்பட்ட படம் 'துக்ளக் தர்பார்'. லலித் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது.

ஏனென்றால், இந்தப் படத்துக்குக் கொடுத்த தேதிகளைத் தான் 'மாஸ்டர்' படத்துக்கு மாற்றிக் கொடுத்தார் விஜய் சேதுபதி. 'துக்ளக் தர்பார்' படத்தின் தயாரிப்பாளர் லலித்தான் 'மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளர் என்பதே இதற்குக் காரணம்.

தற்போது 'மாஸ்டர்' படத்துக்கு இடையே சுமார் 10 நாட்களுக்கு மட்டும் 'துக்ளக் தர்பார்' படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. '96' படத்தின் இயக்குநர் ப்ரேம் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் வசனங்களை இயக்குநர் பாலாஜி தரணீதரன் எழுதியுள்ளார்.

இதனை முடித்துவிட்டு 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் விஜய் சேதுபதி. இதற்காகப் பிரம்மாண்டமான ஜெயில் அரங்கம் ஒன்று போடப்பட்டுள்ளது. அதில் விஜய் - விஜய் சேதுபதி மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

SCROLL FOR NEXT