தமிழ் சினிமா

கபாலி முறையைப் பின்பற்றும் தர்பார்

செய்திப்பிரிவு

'கபாலி' படத்தைப் போலவே, 'தர்பார்' படத்துக்கும் விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கபாலி'. தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தினார்கள். அதில் விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டதும் அடங்கும். விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்ட முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது 'கபாலி'.

தற்போது அதைப் பின்பற்றி 'தர்பார்' படத்துக்கும் விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் இன்று (ஜனவரி 2) முதல் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இணையத்தில் இதன் புகைப்படங்கள் வெளியாகின. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'தர்பார்'. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

'தர்பார்' படத்தை முடித்துவிட்டு, தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

SCROLL FOR NEXT