தமிழ் சினிமா

‘விஸ்வாசம்’ பாணியில் 'தலைவர் 168' பாடல்

செய்திப்பிரிவு

‘விஸ்வாசம்’ படப் பாணியில் 'தலைவர் 168' படத்தின் பாடல்களை வடிவமைத்து, படமாக்கியுள்ளது படக்குழு.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தான் சம்பந்தப்பட்ட அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டதால், தற்போது சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். முதற்கட்டப் படப்பிடிப்பில் பாடலொன்றைப் படமாக்கியிருக்கிறது படக்குழு. இந்தப் பாடல் சிவா - அஜித் இணைப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'விஸ்வாசம்' படத்தின் 'தூக்குதுரை' பாடல் பாணியில், நாட்டுப்புறப் பாடல் பின்னணியில் உருவாக்கியிருக்கிறார் இமான்.

இந்தப் பாடல் படப்பிடிப்பில் ரஜினி மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்தவுடன், புனேவில் சில முக்கியக் காட்சிகளை 20 நாட்களுக்குப் படமாக்கச் செல்லவுள்ளது படக்குழு. இதற்காக விரைவில் புனே செல்லவுள்ளது படக்குழு.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT