தமிழ் சினிமா

பூர்ணாவின் விஸ்வரூபம்!

செய்திப்பிரிவு

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக சின்னத்திரை பயணத்தை தொடங்கிய சங்கீதா, சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அழகு’ சீரியல் மூலம் பரபரப்பான வில்லி பூர்ணாவாக மாறியுள்ளார். இந்த மாற்றம் குறித்து அவர் கூறியதாவது:

ஓராண்டுக்கு முன்பு வரை, நான் இந்த அளவுக்கு கவனிக்கப்படுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் இன்று பூர்ணாவாக எல்லோர் பார்வையிலும் விழுந்திருக்கிறேன். ஒரு சீரியலில் நாயகி, வில்லி இவர்கள் இருவர்தான் பிரதான களம். மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் அவர்களைச் சுற்றியே இருக்கிறது. அதிலும் வில்லி கேரக்டரை வைத்துதான் கதையே உருவாகும். அந்த மாதிரி ஒரு சூழலில் எனக்கு இந்த கதாபாத்திரம் அமைந்ததும் மகிழ்ச்சி.

கேரக்டர் நடிகையாகத்தான் அழகு சீரியலுக்குள் வந்தேன். இந்த பூர்ணா ரோல் விஸ்வரூபம் எடுக்கும்போது சீரியல் டிஆர்பியும் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்தமாதிரி சவால் மிக்க கதாபாத்திரங்களையே இனி தேர்வு செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

‘‘தொகுப்பாளினி சங்கீதாவை இனி பார்க்க முடியாதா?’’ என்று கேட்டதற்கு, ‘‘அந்த இடத்தை விட்டுவிடக்கூடாது என்ற ஆசை எனக்கும் உண்டு. ஆனால், இந்த சீரியல் ஏற்படுத்தி தந்த அடையாளம், நான் வேறு எங்கு சென்றாலும், அது இந்த கதாபாத்திரத்தை திசை மாற்றிவிடும். அதனால் இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT