தமிழ் சினிமா

'தலைவர் 168' அப்டேட்: ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ்

செய்திப்பிரிவு

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில், ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளது உறுதியானது.

'தர்பார்' படத்தைத் தொடர்ந்து, சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இமான் இசையமைப்பில் உருவான பாடலொன்றைப் படமாக்கி வருகிறது படக்குழு.

இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

ரஜினியின் தந்தைக்குத் தாமதமாகப் பிறந்த பெண்ணாகக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சிவா. இதனால், ரசிகர்கள் பார்வையில் ரஜினிக்குத் தங்கை கீர்த்தி சுரேஷ் தவறாக இருக்காது என்றும், அதற்குத் தகுந்தாற் போல் திரைக்கதை வடிவமைப்பு இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலேயே அரங்குகள் அமைத்துப் படமாக்க, படக்குழு முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT