தேவதைக்குரிய காதல் மற்றும் திருமணம் அமைந்ததில் அதிர்ஷ்டம் என்று நடிகை ரிச்சா நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.
தமிழில் சிம்பு, தனுஷ் ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாயா. அதனைத் தொடர்ந்து திரையுலகிலிருந்து விலகி, வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்ற ரிச்சா தன்னுடன் படித்த ஜோவைக் காதலித்து வந்தார்.
ஜனவரி 15-ம் தேதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் காதலரை அறிமுகப்படுத்தினார் ரிச்சா. இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால், எப்போது திருமணம் என்பதை ரிச்சா அறிவிக்கவில்லை.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரிச்சா - ஜோ இருவரின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகின. இதை வைத்து திரையுலகப் பிரபலங்கள் பலரும் ரிச்சா - ஜோ தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
தற்போது தனது திருமணம் தொடர்பாக ரிச்சா கூறியதாவது:
"அன்பான வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி. என் வாழ்வின் அன்புக்குரியவருடன் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. நாங்கள் கிரேட் மட்டத்தில் பள்ளி வகுப்பறை சகாக்கள். (கல்லூரி அல்ல, அமெரிக்காவில் கல்லூரி என்றால் இளங்கலையை மட்டுமே குறிக்கும்). மேலும் எங்கள் எம்.பி.ஏ படிப்பில் இருந்த 140 மாணவர்களில் நாங்கள் இருவரும்தான் ஒருவரிடம் ஒருவர் இரண்டாம் ஆண்டு வரை பேசிக்கொள்ளவில்லை.
எதிரிணைகள் கவரும். நான் வளர்ந்த மிச்சிகனில் இந்திய-அமெரிக்கச் சடங்கில், எங்கள் நண்பர்கள், உறவினர்கள் இரு குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதில் ‘ரகசியக் காதல் திருமணம் என்று செய்தி வெளியானது எப்படி என்று புரியவில்லை. மிக நல்ல குடும்பத்திற்குச் செல்வதில் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். ஜோ-வும் அன்பான எங்கள் உறவினர்கள் கிடைக்க அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். ஒரு தேவதைக்குரிய காதல் மற்றும் திருமணம் அமைந்ததில் அதிர்ஷ்டம்.
என் கரியரின் பிற நலன்களுக்காக 6 ஆண்டுகளுக்கு முன்பு திரைத்துறையை விட்டு வெளியே வந்தாலும் இன்றும் கூட உங்களது ஆதரவு என்னை நெகிழச் செய்கிறது. எப்போதும் இதற்காக நன்றியுடன் இருப்பேன். என் அன்புக்குரிய அனைவருக்கும் விடுமுறை நாட்களுக்கான வாழ்த்துக்கள்”.
இவ்வாறு ரிச்சா தெரிவித்துள்ளார்.