தமிழ் சினிமா

எனக்கு இது இன்னொரு கேரியர்! -‘கோடீஸ்வரி’ ராதிகா சரத்குமார் உற்சாகம்

செய்திப்பிரிவு

நடிகை ராதிகா தொகுத்து வழங்கும் ‘கோடீஸ்வரி’ கேம் ஷோ நிகழ்ச்சி, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் வாரம் முதல் தொடங்க உள்ளது. முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இது. இதன் வழியே அவர்களின் கனவுகளுக்கு இறக்கைகட்டி பறக்கச் செய்யும் நோக்கமாக இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பாக்கத் திட்டமிட்டிருக்கிறனர்.

இந்த நிகழ்ச்சி வாயிலாக தொகுப்பாளினியாக அடி எடுத்து வைக்கும் நடிகை ராதிகா சரத்குமார் இதுகுறித்து கூறியதாவது:
நடிப்பு, சீரியல் தயாரிப்பு, பிசினஸ், குடும்பம், குழந்தைகள் என ஓடிக் கொண்டிருக்கும் எனக்கு ‘நேர நிர்வாகம்’ என்கிற ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சியாக இதை பார்க்கிறேன். இது வேறொரு உலகம். இது எனக்கு இன்னொரு கேரியர் மாதிரிதான் தெரிகிறது. இதில் நான் நானாக இருக்கப்போகிறேன். அதே சமயம், விளையாட்டில் கலந்துகொள்ளும் பெண்
களை கதை சொல்ல வைக்க வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும், ஒரு தோழியாக இருக்க வேண்டும், கண்டிப்பானவளாகவும் இருக்க வேண்டும். இப்படி பல பொறுப்பு உண்டு. தொடர்ந்து 2 மாதங்கள் வேறு எந்த சினிமாவும் ஒப்புக்கொள்ளாமல் இந்த நிகழ்ச்சிக்குள் வருகிறேன். காரணம், பல பெண்களின் வாழ்க்கையை இது புரட்டிப் போடப் போகிறது. நிறைய கனவுகளுக்கு இது அடித்தளம் அமைத்துக் கொடுக்கப் போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT